Enable Javscript for better performance
செளரவ் கங்குலியைப் போன்று ஆக்ரோஷமிக்க கேப்டன் கோலி- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலியைப் போன்று விராட் கோலியும் ஆக்ரோஷமிக்க கேப்டன் என்று கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

    முத்தரப்புத் தொடரில் இந்திய அணிக்கு கோலி தலைமையேற்று வழிநடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக ராஜ்குமார் மேலும் கூறியது:

    இயற்கையாகவே விராட் கோலி ஆக்ரோஷமிக்க வீரர். எப்போதுமே அதிரடியை விரும்பக்கூடியவர். எதிராளிகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர். அதுதான் அவருடைய கேப்டன்ஷிப்பிலும் எதிரொலித்துள்ளது.

    என்னைப் பொறுத்தவரையில் கங்குலியைப் போன்று விராட் கோலியும் ஆக்ரோஷமிக்க கேப்டன். அதேநேரத்தில் தோனியிடம் இருந்து விராட் கோலி நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

    கோலி, ஆக்ரோஷமிக்க கேப்டனாக இருந்தாலும், அதிலும் ஓர் எல்லையைத் தாண்டக்கூடாது என்பது அவருக்குத் தெரியும். அப்படி அவர் எல்லை தாண்டினால், அதுகுறித்து அவருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai