Enable Javscript for better performance
முத்தரப்புத் தொடர்: 201 ரன்களில் சுருண்டது இலங்கை- Dinamani

சுடச்சுட

    
    12spt6

    முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை 201 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா.

    டிரினிடாட் அன்ட் டொபாகோ தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தசைப்பிடிப்பில் இருந்து மீண்ட இந்திய கேப்டன் தோனி, மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

    அதனால் முரளி விஜய் நீக்கப்பட்டார். உமேஷ் யாதவுக்குப் பதில் வினய் குமார் சேர்க்கப்பட்டார்.

    டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் உபுல் தரங்கா 11, ஜெயவர்த்தனா 22 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன்பிறகு குமார் சங்ககாரா-திரிமானி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது. திரிமானி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து சங்ககாராவும் ஆட்டமிழந்தார். அவர் 100 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார்.

    இதன்பிறகு அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. திசாரா பெரேரா 2, சண்டிமால் 5, ஹெராத் 5, மலிங்கா 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக லக்மல் 1 ரன்னில் வெளியேற, இலங்கை 48.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு சுருண்டது.

    இந்தியத் தரப்பில ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்தியா-66/2

    பின்னர் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 26, தினேஷ் கார்த்திக் 17 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். முன்னதாக ஷிகர் தவன் 16, கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி வெற்றி பெற 30 ஓவர்களில் 136 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai