Enable Javscript for better performance
ராஜபாளையத்தில் மாநில இறகுப்பந்து போட்டி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ராம்கோ மாநில அளவிலான சீனியர் தரவரிசை இறகுப்பந்து போட்டி ராஜபாளையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

    ஸ்ரீரமணா ஸ்போர்ட்ஸ் டவுன் உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இப்போட்டியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ராம்கோ குழுமத்தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா கே.கோபால்சாமி எம்.எல்.ஏ ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 170-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர், இரட்டையர், மகளிர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதனை ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai