Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 201 ரன்கள் முன்னிலை- Dinamani

சுடச்சுட

    

    ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸில் 110 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது.

    இதன்மூலம் ஆஸ்திரேலியாவைவிட 201 ரன்கள் கூடுதலாக பெற்றிருந்தது இங்கிலாந்து. இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலியா 64.5 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    முதல் இன்னிங்ஸில் 65 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணி, 2-வது நாளான வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அலாஸ்டர் குக் 37, பீட்டர்சன் 35 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 3-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் 120 பந்துகளில் அரைசதம் கண்டார். அந்த அணி 121 ரன்களை எட்டியபோது பீட்டர்சன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இயான் பெல் களம்புகுந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய அலாஸ்டர் குக், தேநீர் இடைவேளைக்குப் பிறகு அரைசதம் கண்டார். எனினும் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.

    பின்னர் வந்த பேர்ஸ்டோவ் 15, மட் பிரையர் 31 ரன்களில் வெளியேறினர். அந்த அணி 110 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது.

    சுருக்கமான ஸ்கோர்

    முதல் இன்னிங்ஸ்

    இங்கிலாந்து-215 (டிராட் 48, போர்ஸ்டோவ் 37, ரூட் 30,

    சிடில் 5வி/50)

    ஆஸ்திரேலியா-280 (ஆஷ்டன் 98, பில் ஹியூஸ் 81, ஸ்மித் 53,

    ஆண்டர்சன் 5வி/85)

    2-வது இன்னிங்ஸ்

    இங்கிலாந்து-266/6 (பெல் 66*,

    பீட்டர்சன் 64, குக் 50, மிட்செல் ஸ்டார்க் 2வி/61,

    ஆஷ்டன் அகர் 2வி/66)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai