Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    * இந்தோனேசிய ஓபன் உள்ளிட்ட போட்டிகளில் தோல்வி கண்டதால் எவ்வித கவலையும் இல்லை. எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் என்னால் பதக்கம் வெல்ல முடியும் என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    * 4-வது உலகக் கோப்பை கபடிப் போட்டி (ஆடவர், மகளிர்) வரும் நவம்பர் 9 முதல் 23-ம் தேதி வரை பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் நடைபெறவுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

    * இந்திய உணவுக் கழகத்தில் (எஃப்.சி.ஐ.) பணிபுரியும் விளையாட்டு வீரர்களுக்காக புதிய விளையாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    * இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து, இங்கிலாந்து பேட்ஸ்மேன் டிராட்டின் பேட்டில் பட்டதா, இல்லையா என்பதை "ஹாட்-ஸ்பாட்' கேமராவால் உறுதிசெய்ய முடியாமல் போனதற்காக ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி தேவ் ரிச்சர்ட்ஸன் மன்னிப்பு கோரியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai