பயிற்சியாளரால் கிடைத்த வெற்றி
By dn | Published on : 13th July 2013 02:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றதற்கு பயிற்சியாளரும், உடன் வந்திருந்த அலுவலர்களுமே காரணம் என்று இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற சிவ தாபா, விமானம் மூலம் குவாஹாட்டிக்கு வெள்ளிக்கிழமை வந்தார். அவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது சிவ தாபா கூறியது:
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. நான் மேற்கொண்ட தீவிரப் பயிற்சியால், சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல முடிந்தது. பயிற்சியில் தீவிர கவனம் செலுத்துவதற்கு அதிக அளவில் தியானம் செய்ய வேண்டும். கடுமையாக உழைப்பது என்னுடைய பழக்கமாகும்.
நான் தங்கப் பதக்கத்தோடு இங்கு வந்து நிற்பதற்கு பயிற்சியாளரும், உடன் வந்திருந்த அலுவலர்களும்தான் காரணம். யாரும் தனித் திறமையோடு பிறப்பதில்லை. கடுமையான உழைப்பு மட்டுமே எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது என்றார்.