Enable Javscript for better performance
அகில இந்திய பால் பாட்மிண்டன்: ஐ.சி.எஃப்., தெற்கு ரயில்வே அணிகள் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய பால் பாட்மிண்டன்: ஐ.சி.எஃப்., தெற்கு ரயில்வே அணிகள் வெற்றி

    By dn  |   Published on : 14th July 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய பால் பாட்மிண்டன் போட்டியின் முதல் நாளில் ஐ.சி.எஃப்., தெற்கு ரயில்வே அணிகள் வெற்றி கண்டன.

    5-வது செயின்ட் ஜோசப் அகில இந்திய "இன்விட்டேஷன்' பால் பாட்மிண்டன் போட்டி (ஆடவர்) சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.

    லீக் மற்றும் சூப்பர்-லீக் அடிப்படையில் நடைபெறும் இப்போட்டியில் 17 அணிகள் பங்கேற்றுள்ளன.

    முதல் நாளான சனிக்கிழமை நடைபெற்ற "ஏ' பிரிவு ஆட்டங்களில் தெற்கு ரயில்வே "பி' அணி 29-9, 29-8 என்ற கணக்கில் சத்தீஸ்கர் அணியையும், பி.எஸ்.என்.ஏ. அணி 29-18, 29-8 என்ற கணக்கில் விக்டோரியா அணியையும், ஐசிஎஃப் அணி 29-14, 29-6 என்ற கணக்கில் சத்தீஸ்கர் அணியையும் வீழ்த்தின. இதேபோல் 2-வது சுற்றிலும் தெற்கு ரயில்வே "பி', ஐசிஎஃப் ஆகிய அணிகள் வெற்றி கண்டன.

    பி, சி, டி ஆகிய பிரிவுகளில் மேற்கு ரயில்வே, பிடிஎல், தெற்கு ரயில்வே "ஏ', ஐ.ஓ.பி. உள்ளிட்ட அணிகள் வெற்றி கண்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai