Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆஷஸ் டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்

    By dn  |   Published on : 14th July 2013 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bell

    ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராடி வருகிறது.

    311 ரன்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலியா, 4-வது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 71 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற இன்னும் 137 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.

    இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு சுருண்டது. இதன்பிறகு முதல் இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலியா 64.5 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    முதல் இன்னிங்ஸில் 65 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 133 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. இயான் பெல் 95, ஸ்டூவர்ட் பிராட் 47 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    இயான் பெல் சதம்: 4-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ஸ்டூவர்ட் பிராட் 124 பந்துகளில் அரைசதம் கண்டார். அவரைத் தொடர்ந்து இயான் பெல் 237 பந்துகளில் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் பெல் அடித்த 18-வது சதமாகும்.

    இங்கிலாந்து அணி 356 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 148 பந்துகளைச் சந்தித்த ஸ்டூவர்ட் பிராட் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராட்-பெல் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தது.

    அவரைத் தொடர்ந்து இயான் பெல்லும் ஆட்டமிழந்தார். 267 பந்துகளைச் சந்தித்த அவர், 15 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த கிரீம் ஸ்வான் 9 ரன்களிலும், ஆண்டர்சன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் 375 ரன்களில் முடிவுக்கு வந்தது.

    இங்கிலாந்து தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் பட்டின்சன், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா-174/6: இதன்பிறகு 311 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன்-கிறிஸ் ரோஜர்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 24.1 ஓவர்களில் 84 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. வாட்சன் 74 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து எட் கோவன் களம்புகுந்தார். மறுமுனையில் கிறிஸ் ரோஜர்ஸ், டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் 43 பந்துகளைச் சந்தித்த கோவன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி 124 ரன்களை எட்டியபோது கிறிஸ் ரோஜர்ஸ் 52 ரன்களில் வெளியேறினார்.

    இதன்பிறகு வந்த கேப்டன் கிளார்க் 23, ஸ்மித் 17 ரன்களிலும், பில் ஹியூஸ் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். 4-வது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 71 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. பிராட் ஹாடின் 11, ஆஷ்டன் அகர் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

    ஸ்டூவர்ட் பிராடால் சர்ச்சை: இங்கிலாந்து 2-வது இன்னிங்ûஸ ஆடியபோது அந்த அணியின் பிராட் (37 ரன்கள்), ஆஷ்டன் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச், விக்கெட் கீப்பர் ஹாடினின் கையில் இருந்து நழுவ, அதை கிளார்க் கேட்ச் செய்தார். ஆனால் பேட்டில் பந்து படவில்லை என நினைத்து நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதனால் பிராடும் களத்தில் இருந்து வெளியேறவில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி, நடுவரிடம் மேல்முறையீடு செய்யும் இரு வாய்ப்பையும் ஏற்கெனவே இழந்திருந்ததால், மூன்றாவது நடுவரையும் அணுக முடியாமல் போனது.

    இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. பிராட், தானாகவே முன்வந்து வெளியேறியிருக்க வேண்டும். அப்படி செய்யாத அவருக்கு அடுத்த போட்டியில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகளின் மைக் ஹோல்டிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

    சுருக்கமான ஸ்கோர்

    முதல் இன்னிங்ஸ்

    இங்கிலாந்து-215 (டிராட் 48, போர்ஸ்டோவ் 37, ரூட் 30, சிடில் 5வி/50)

    ஆஸ்திரேலியா-280 (ஆஷ்டன் 98, பில் ஹியூஸ் 81, ஸ்மித் 53,

    ஆண்டர்சன் 5வி/85)

    2-வது இன்னிங்ஸ்

    இங்கிலாந்து-375 (பெல் 109, பிராட் 65, பீட்டர்சன் 64, குக் 50, மிட்செல் ஸ்டார்க் 3வி/81, சிடில் 3வி/85)

    ஆஸ்திரேலியா-162/5 (ரோஜர்ஸ் 52, வாட்சன் 46, ஸ்டூவர்ட் பிராட் 2வி/33)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai