Enable Javscript for better performance
ஓய்வுக்கு முன் மேலும் சில கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியும்: சானியா- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வுக்கு முன் மேலும் சில கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியும்: சானியா

    By dn  |   Published on : 14th July 2013 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sania

    ஓய்வு பெறுவதற்கு முன்பு மேலும் சில கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மணிக்கட்டு காயம், முழங்கால் என பல்வேறு காயங்களையும், சோதனைகளையும் தனது டென்னிஸ் வாழ்க்கையில் சந்தித்த சானியா, இது தொடர்பாக மேலும் கூறியது:

    வயதாகும்போது முழு உடற்தகுதியை பராமரிப்பது கடினமானதாகும். நான் 18 வயதில் இருந்ததைவிட, இப்போது கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. வயதாகிவிட்டதால் இப்போது காயத்திலிருந்து குணமடைவதற்கும் அதிக நாள்கள் ஆகிறது. நான் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்துள்ளேன். டென்னிஸýக்கு அதிக உடல் உழைப்பு தேவைப்படுகிறது. அதனால் பெரிய அளவில் காயங்களும் ஏற்படுகின்றன. உலகில் உள்ள கடினமான விளையாட்டுகளில் டென்னிஸýம் ஒன்று. இதுவரை இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறேன். எனது ஓய்வுக்கு முன்பு மேலும் சில கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியும் என நம்புகிறேன் என்றார்.

    இந்த சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வெல்ல காத்திருப்பதாகத் தெரிவித்த சானியா, "அதுதான் என்னுடைய இலக்கு. "ஹார்ட் கோர்ட்' எனக்கு சாதகமான மைதானம் ஆகும். அமெரிக்க ஓபனை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எல்லா டென்னிஸ் வீரர், வீராங்கனைகளுக்குமே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் விளையாடுவதும், அதில் பட்டம் வெல்வதும்தான் கனவாக இருக்கும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai