Enable Javscript for better performance
மைக்கேல் நாப்ஸை நீக்கியது சரியான நடவடிக்கை: திலீப் திர்கே- Dinamani

சுடச்சுட

    

    மைக்கேல் நாப்ஸை நீக்கியது சரியான நடவடிக்கை: திலீப் திர்கே

    By dn  |   Published on : 14th July 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dilip

    இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைக்கேல் நாப்ûஸ நீக்கியது சரியான நடவடிக்கையே என்று முன்னாள் ஹாக்கி வீரரும், எம்.பி.யுமான திலீப் திர்கே கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் நாப்ஸ், 2011-ல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணி கடைசி இடத்தையே (12-வது இடம்) பிடித்தது.

    இதேபோல் சமீபத்தில் முடிவடைந்த உலக ஹாக்கி லீக் போட்டியிலும் இந்தியா 6-வது இடத்தையே பிடித்தது. இதுபோன்ற தொடர் தோல்விகளின் எதிரொலியாக சில தினங்களுக்கு முன் பயிற்சியாளர் பதவியில் இருந்து மைக்கேல் நாப்ஸ் நீக்கப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து அணியின் உயர் செயல்பாட்டுக்கான இயக்குர் ஓல்ட்மான்ஸ் கூடுதலாக தலைமைப் பயிற்சியாளர் பதவியையும் கவனிப்பார் என்று ஹாக்கி இந்தியா அறிவித்தது. அவருக்கு உதவியாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கெüஷிக், பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மலேசியாவில் வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், இது தொடர்பாக திலீப் திர்கே கூறியிருப்பது:

    மைக்கேல் நாப்ûஸ நீக்கியது சரியான நடவடிக்கை என நினைக்கிறேன். இதேபோல் ஓல்ட்மான்ûஸ தலைமைப் பயிற்சியாளராக நியமித்திருப்பது நல்ல முடிவு. நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளின் பயிற்சியாளராக இருந்தபோது ஓல்ட்மான்ஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதேபோல் கெüஷிக்கும் தகுதியான பயிற்சியாளர்தான். எனவே தற்போதைய நிலையில் ஓல்ட்மான்ஸ்-கெüஷிக் கூட்டணியால் இந்திய அணிக்காக சிறப்பாக செயலாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

    இந்திய அணி, மோசமான பார்மில் உள்ளதால் ஆசிய கோப்பை போட்டியில் கடுமையான நெருக்கடி இருக்கும். எனினும் இந்திய வீரர்களும், பயிற்சியாளர்களும் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கோப்பையை வெல்ல முயற்சிக்க வேண்டும். ஆசிய கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ளதால், சிறப்பாக தயாராக முடியும். ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று உலகக் கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெறும் என நினைக்கிறேன் என்றார்.

    திலீப் திர்கே, இந்தியாவுக்காக 412 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai