Enable Javscript for better performance
அகில இந்திய பால் பாட்மிண்டன்: அரையிறுதியில் ஐசிஎஃப், ஐஓபி- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய பால் பாட்மிண்டன்: அரையிறுதியில் ஐசிஎஃப், ஐஓபி

    By dn  |   Published on : 15th July 2013 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய பால் பாட்மிண்டன் போட்டியில் ஐ.ஓ.பி. மேற்கு ரயில்வே, தெற்கு ரயில்வே, ஐசிஎஃப் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    5-வது செயின்ட் ஜோசப் அகில இந்திய "இன்விட்டேஷன்' பால் பாட்மிண்டன் போட்டி (ஆடவர்) சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

    லீக் மற்றும் சூப்பர்-லீக் அடிப்படையில் நடைபெறும் இப்போட்டியில் 17 அணிகள் பங்கேற்றுள்ளன.

    2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் மேற்கு ரயில்வே அணி 2-0 என்ற கணக்கில் பிஎஸ்என்ஏ அணியையும், தெற்கு ரயில்வே அணி 2-0 என்ற கணக்கில் அம்பத்தூர் பிபிசி அணியையும் வீழ்த்தின.

    மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஐஓபி, ஐசிஎஃப் அணிகள் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறின.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai