Enable Javscript for better performance
ஆசிய ரோட் ரேஸிங் சாம்பியன்ஷிப்: ஹிரோக்கி, மகோட்டோவுக்கு இரட்டை வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய ரோட் ரேஸிங் சாம்பியன்ஷிப்: ஹிரோக்கி, மகோட்டோவுக்கு இரட்டை வெற்றி

    By dn  |   Published on : 15th July 2013 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    racing

    சென்னையில் நடைபெற்ற ஆசிய ரோட் ரேஸிங் சாம்பியன்ஷிப்பில் ஹோண்டா ஆசிய ட்ரீம் கோப்பை போட்டியில் ஜப்பானின் ஒனோ ஹிரோக்கி, மகோட்டோ டமாட்டா ஆகியோர் தங்கள் பிரிவில் இரு ரேஸ்களிலும் வெற்றி கண்டனர்.

    இந்த சீசனுக்கான ஆசிய ரோட் ரேஸிங் சாம்பியன்ஷிப் மோட்டார் சைக்கிள் போட்டி மொத்தம் 6 சுற்றுகளைக் கொண்டதாகும். அதன் 3-வது சுற்று சென்னை இருங்காட்டு கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஆசிய ட்ரீம் கோப்பை: இதில் ஹோண்டா ஆசிய ட்ரீம் கோப்பை போட்டியின் இரு ரேஸ்களிலும் ஜப்பானின் ஒனோ ஹிரோக்கி வெற்றி கண்டார். 10 சுற்றுகளைக் கொண்ட முதல் ரேஸில் 19 நிமிடம், 33.9 விநாடிகளிலும், 8 சுற்றுகளைக் கொண்ட 2-வது ரேஸில் 15 நிமிடம், 48.891 விநாடிகளிலும் ஹிரோக்கி இலக்கை எட்டினார்.

    முதல் ரேஸில் இந்தோனேசியாவின் திவி சதிரா 2-வது இடத்தையும், மலேசியாவின் இதாம் பவி 3-வது இடத்தையும் பிடித்தனர். 2-வது ரேஸில் இந்தோனேசியாவின் ஜெர்ரி சலீம் 2-வது இடத்தையும், மலேசியாவின் அஷ்ரஃப் ரஸôலி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    3 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் ஆசிய ட்ரீம் கோப்பை பிரிவில் ஹிரோக்கி 145 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அஷ்ரஃப் ரஸôலி 82 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்ரி சலீம் 81 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    அன்டர்போன் 115 சிசி பிரிவு: இந்தப் போட்டியின் முதல் ரேஸில் (10 சுற்றுகள்) மலேசியாவின் அஹமது அஃபிஃப் அம்ரானும் (19 நிமிடம், 59.312 விநாடிகள்), 2-வது ரேஸில் (10 சுற்றுகள்) மலேசியாவின் அஃபென்டி ரோஸ்லியும் (20:06.603) வெற்றி கண்டனர்.

    இந்தப் பிரிவில் மலேசியாவின் அஹமது அஃபிஃப் 104 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

    சூப்பர் ஸ்போர்ட் 600 சிசி: இந்தப் போட்டியின் இரு ரேஸ்களிலும் ஜப்பானின் மகோட்டோ டமாட்டா வெற்றி கண்டார். இதில் 2-வது ரேஸில் 9-வது சுற்றின்போது டமாட்டா, தவறி கீழே விழுந்தார். இதையடுத்து அந்த ரேஸ் நிறுத்தப்பட்டு, முந்தைய சுற்றில் பெற்ற முன்னிலை அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 8-வது சுற்றில் முன்னிலை பெற்றிருந்த டமாட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இந்தப் பிரிவில் மலேசியாவின் அஸ்லன் ஷா 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai