Enable Javscript for better performance
ஊக்கமருந்து: அமெரிக்காவின் டைசன் கய் சிக்கினார்- Dinamani

சுடச்சுட

    
    gay

    அமெரிக்காவைச் சேர்ந்த 100 மீ. ஓட்டப் பந்தய வீரர் டைசன் கய் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் ரஷியாவில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து டைசன் விலகியுள்ளார். இவர் 2007-ல் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் 9.75 விநாடிகளில் இலக்கை எட்டி, உலக சாதனை படைத்தவர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக தடகளப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஆவார்.

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் பயிற்சி பெற்று வரும் டைசன் இது தொடர்பாக கூறுகையில், "நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. வேறொருவர் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அதனால் இப்போது இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். மொனாகோவில் நடைபெறவுள்ள டைமன்ட் லீக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் இருந்து விலகுகிறேன்' என்றார்.

    அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு அமைப்பினர் சோதனையில் டைசனின் "ஏ' மாதிரியில் (சாம்பிள்) அவர் ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்துள்ளது. எனினும் "பி' மாதிரி சோதனைக்குப் பிறகே அது உறுதி செய்யப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai