Enable Javscript for better performance
தோனி போன்ற கேப்டன் கிடைத்தது இந்தியாவின் அதிர்ஷ்டம்- Dinamani

சுடச்சுட

    
    laxman

    தோனி போன்ற கேப்டன் கிடைத்தது இந்திய அணியின் அதிர்ஷ்டம் என்று வி.வி.எஸ்.லட்சுமண் தெரிவித்துள்ளார்.

    தோனி தலைமையிலான இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்புத் தொடர் ஆகியவற்றில் அடுத்தடுத்து வெற்றி கண்டுள்ள நிலையில், தோனியை வெகுவாகப் பாராட்டியுள்ள லட்சுமண் மேலும் கூறியது:

    அனைத்து உலகக் கோப்பைகளையும் வென்றுள்ள அவருடைய சாதனைகளே, அவரைப் பற்றி பேசும். இக்கட்டான சூழலில் சிறப்பாக விளையாடி வெற்றியை எளிதாக்கிவிடும் தனித்தன்மை தோனியிடம் உள்ளது. அவர் எப்போதுமே உணர்ச்சி வசப்படமாட்டார். அதுதான் அவரிடம் உள்ள சிறப்பம்சம். அவரைப் போன்ற ஒரு கேப்டனை பெற்றது இந்திய அணியின் அதிர்ஷ்டம் ஆகும் என்றார்.

    ஜடேஜா, ஷிகர் தவன் ஆகியோரின் ஆட்டம் குறித்துப் பேசிய லட்சுமண், "தோனி, ஜடேஜாவை சிறப்பாக பயன்படுத்துகிறார். குறிப்பாக பந்துவீச்சுக்கு ஜடேஜாவை பயன்படுத்தி வருகிறார். ஜடேஜா, சிறந்த பீல்டர் மட்டுமல்ல, நல்ல பேட்ஸ்மேனும்கூட. இந்திய அணியின் மிக முக்கிய வீரராக ஜடேஜா உருவெடுத்துள்ளார்.

    ஜடேஜா மாதிரியான வீரர்களை அணிக்கு கொண்டு வந்த பெருமை தோனியையே சாரும்.ஐபிஎல் போட்டியின்போது ஷிகர் தவனுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளேன். அவர் நல்ல திறமையான வீரர்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai