Enable Javscript for better performance
முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    ander

    ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது இங்கிலாந்து.

    311 ரன்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலியா, கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 110.5 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு சுருண்டது. இதன்பிறகு முதல் இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலியா 64.5 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 2-வது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து 375 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    ஆஸ்திரேலியா தோல்வி: இதன்பிறகு 311 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 4-வது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 71 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. பிராட் ஹாடின் 11, ஆஷ்டன் அகர் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

    கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் பிராட் ஹாடின்-ஆஷ்டன் அகர் ஜோடி மெதுவாக ரன் சேர்த்தது. இந்த ஜோடியைப் பிரிக்க இங்கிலாந்து பெüலர்கள் கடுமையாகப் போராடினர். அவர்களின் போராட்டத்துக்கு தேநீர் இடைவேளைக்கு முன்பாக பலன் கிடைத்தது.

    71 பந்துகளைச் சந்தித்த ஆஷ்டன் அகர் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சில் வீழ்ந்தார். பின்னர் வந்த மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னிலும், பீட்டர் சிடில் 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.

    கடைசி விக்கெட்டுக்கு 65 ரன்கள்: இதன்பிறகு பிராட் ஹாடினுடன் இணைந்தார் ஜேம்ஸ் பட்டின்சன்.

    இந்த ஜோடியை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்த இங்கிலாந்து பெüலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்த இங்கிலாந்து அணியினருக்கு, ஆஸ்திரேலிய ஜோடி அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் விளையாடியது.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய பிராட் ஹாடின் அரைசதம் கண்டார். இதனால் ஆட்டம் ஆஸ்திரேலியா வசமாகும் நிலை ஏற்பட்டது.

    மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரிலேயே ஆண்டர்சன், பிராட் ஹாடினை வீழ்த்த, இங்கிலாந்து 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 147 பந்துகளைச் சந்தித்த பிராட் ஹாடின் 9 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார். ஜேம்ஸ் பட்டின்சன் 57 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட், கிரீம் ஸ்வான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.

    கடைசி விக்கெட் சாதனை

    இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் பில் ஹியூஸ்-ஆஷ்டன் அகர் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. இதேபோல் 2-வது இன்னிங்ஸில் அந்த அணியின் பிராட் ஹாடின்-ஜேம்ஸ் பட்டின்சன் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது.

    இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி விக்கெட்டுக்கு (இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து) 228 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் புதிய சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா. டெஸ்ட் வரலாற்றில் ஒரு போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு ஓர் அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது இதுவே முதல்முறையாகும்.

    சுருக்கமான ஸ்கோர்

    முதல் இன்னிங்ஸ்

    இங்கிலாந்து-215

    (டிராட் 48, போர்ஸ்டோவ் 37, ரூட் 30, சிடில் 5வி/50)

    ஆஸ்திரேலியா-280

    (ஆஷ்டன் 98, பில் ஹியூஸ் 81, ஸ்மித் 53, ஆண்டர்சன் 5வி/85)

    2-வது இன்னிங்ஸ்

    இங்கிலாந்து-375

    (பெல் 109, பிராட் 65, பீட்டர்சன் 64, குக் 50, மிட்செல் ஸ்டார்க் 3வி/81, சிடில் 3வி/85)

    ஆஸ்திரேலியா-296

    (பிராட் ஹாடின் 71, ரோஜர்ஸ் 52, வாட்சன் 46, ஆண்டர்சன் 5வி/73)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai