Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட்: 7 தவறு செய்த நடுவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின்போது நடுவர்கள் 7 தவறுகள் செய்ததை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புக்கொண்டுள்ளது.

    அதில் 4 தவறுகள் டிஆர்எஸ் முறை மூலம் சரி செய்யப்பட்டதாகவும், 3 தவறுகளை சரி செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    டிஆர்எஸ் முறை மூலம் 3-வது நடுவரை அணுகும் இரு வாய்ப்புகளையும் ஆஸ்திரேலியா ஏற்கெனவே இழந்ததாலேயே அந்த 3 தவறுகளையும் சரிசெய்ய முடியவில்லை எனவும் ஐசிசி குறிப்பிட்

    டுள்ளது.

    இதேபோல் டிஆர்எஸ் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக நடுவர் வழங்கும் சரியான முடிவுகளின் அளவு 90.3 சதவீதம் இருந்தது. டிஆர்எஸ் முறை கொண்டு வரப்பட்ட பிறகு, சரியான முடிவுகளின் அளவு 95.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டியில் மைதானம் ரிவர்ஸ்விங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அப்படிப்பட்ட சூழல்களில் நடுவராக செயல்படுவது கடினமானது. அந்த சூழலிலும் நடுவர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். நடுவர்கள் அலீம் தார், தர்மசேனா, எராஸ்மஸ் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி

    வருகின்றனர்.

    எனினும் வீரர்களைப் போலவே, நடுவர்களுக்கும் நல்ல நாள்கள், மோசமான நாள்கள் இருக்கும். நடுவரின் தீர்ப்பு சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும், அதுதான் இறுதியானது.

    அதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்பது நம் அனைவருக்குமே தெரியும் என்று ஐசிசி கூறியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai