Enable Javscript for better performance
ஆஸ்திரேலிய அணியின் \\\"புற்றுநோய்\\\' வாட்சன்- Dinamani

சுடச்சுட

    
    australi

    ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய அணியின் "புற்றுநோய்' என்று கேப்டன் மைக்கேல் கிளார்க் குறிப்பிட்டதாக சமீபத்தில் நீக்கப்பட்ட பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

    தொடர் தோல்வி, வீரர்களின் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவின் மிக்கி ஆர்தர், ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாகவே நீக்கப்பட்டார். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான டேரன் லீமான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், 2015-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியளிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் என்னை ஒப்பந்தம் செய்தது. ஆனால் முன்னதாகவே என்னை நீக்கிவிட்டது. எனவே எனக்கு ரூ.22 கோடி நஷ்டஈடு தர வேண்டும் அல்லது 2015-ம் ஆண்டு வரை பயிற்சியாளர் பதவியில் என்னை அமர்த்த வேண்டும் என்று கோரி மெல்போர்ன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் மிக்கி ஆர்தர்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஏற்பட்ட வீரர்கள் இடையிலான பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆர்தர் தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அதில், "வாட்சன், ஆஸ்திரேலிய அணியின் "புற்றுநோயாக' இருக்கிறார் என்று கேப்டன் கிளார்க் குறிப்பிட்டார். மேலும் அவர்கள் இருவரிடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வந்தது. நான் 2011-ல் பயிற்சியாளராக சேர்ந்தது முதல் அவர்கள் இருவரிடையிலான பிரச்னையை தீர்ப்பதற்கு முயற்சி எடுத்து வந்தேன். நான் தென் ஆப்பிரிக்கர் என்பதால் எனக்கு எதிராக இனரீதியாகவும் பாகுபாடு பார்த்தார்கள். ஆஸ்திரேலியர்களின் அப்படிப்பட்ட போக்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

    இந்திய டெஸ்ட் தொடரின்போது ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக 4 வீரர்களை நீக்கியபோது, ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திலிருந்து எனக்கு எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை' என்று ஆர்தர் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai