Enable Javscript for better performance
இந்திய அணியின் மேலாளராக ரவி ஜெயின் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் மேலாளராக தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலர் ரவி ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இத்தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் மேலாளராக ரவி ஜெயின் அறிவிக்கப்பட்டுள்ளது தில்லி கிரிக்கெட் சங்கத்துக்கு கிடைத்த பெருமை என்று அச்சங்கத்தின் பொதுச் செயலர் எஸ்.பி.பன்சால் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியின் ஊடக மேலாளராக ரவி ஜெயின் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai