Enable Javscript for better performance
ஊக்கமருந்து விவகாரம்: ஜமைக்கா வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இத்தாலி போலீஸ் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    ஊக்கமருந்து விவகாரம்: ஜமைக்கா வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இத்தாலி போலீஸ் சோதனை

    By dn  |   Published on : 16th July 2013 11:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ஜமைக்கா வீரர் ஆசாஃபா பாவெல், வீராங்கனை ஷெரோனி சிம்ப்ஸன் ஆகியோர் தங்கியிருந்த ஹோட்டலில் இத்தாலி போலீஸôர் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

    அப்போது மருந்து மற்றும் தசைநார் போன்ற சில பொருள்களை போலீஸôர் கைப்பற்றியுள்ளனர். சோதனைக்குப் பின்னரே, அது எந்த வகையிலான பொருள் என்பது குறித்து தெரியவரும் என்று இத்தாலி போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

    இத்தாலியின் வடகிழக்கு பகுதியான லிக்நானோ சபியாடோரோவில் ஃபிரா ஐ பினி என்ற ஹோட்டல் உள்ளது. ஜமைக்கா வீரர்கள் இத்தாலி வரும்போதெல்லாம் இந்த ஹோட்டலில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    லிக்நானோவில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஜமைக்கா வீரர்கள் இங்கு வந்தனர். இந்த நிலையில் பாவெல், சிம்ப்ஸன் ஆகியோர் ஊக்கமருந்து உட்கொண்டிருப்பது சனிக்கிழமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, போட்டியில் பங்கேற்கவிருந்தவர்களின் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

    இந்த நிலையில் பாவெல், சிம்ப்ஸ்ன், அவருடைய உடற்செயலியல் நிபுணர் (பிஸியோ) கிறிஸ்டோபர் ஆகியோர் தங்கியிருந்த ஹோட்டலில் இத்தாலி போலீஸôர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக இத்தாலியின் உடினி போலீஸ் கேப்டன் அந்தோனியோ பிசாபியா கூறுகையில், "நாங்கள் கைப்பற்றிய மருந்து மற்றும் தசைநார் போன்ற பொருள்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டதா அல்லது சட்ட விரோதமானதா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை' என்றார்.

    100 மீ. ஓட்டத்தில் முன்னாள் உலக சாதனையாளரான பாவெல், 2008 ஒலிம்பிக்கில் 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜமைக்கா அணியிலும் இடம்பெற்றிருந்தவர். உலக தடகளப் போட்டி, காமன்வெல்த் தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்கப் பதக்கங்களை குவித்தவர் ஆவார்.

    சிம்ப்ஸன், 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் 2004-ல் ஒலிம்பிக்கில் தங்கமும், 2008 ஒலிம்பிக்கில் வெள்ளியும் வென்றவர் ஆவார்.

     

    பாவெல், சிம்ப்ஸனிடம் விசாரணை

    ஊக்கமருந்து விவகாரம் தொடர்பாக பாவெல், சிம்ப்ஸன் ஆகியோரிடம் இத்தாலி போலீஸôர் விசாரணை நடத்தியுள்ளனர்.

    விசாரணையின்போது அவர்கள் இருவரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், பிஸியோ கிறிஸ்டோபர்தான் இதற்குக் காரணம் என்றும் கூறியதாக ஏ.என்.எஸ்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai