Enable Javscript for better performance
ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங்: அரசுத் தரப்பு சாட்சியாகிறார் திராவிட்- Dinamani

சுடச்சுட

    

    ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங்: அரசுத் தரப்பு சாட்சியாகிறார் திராவிட்

    By dn  |   Published on : 16th July 2013 11:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dravid

    ஐபில் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் ராகுல் திராவிட் அரசுத் தரப்பு சாட்சியாகிறார்.

    கடந்த ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் மற்றும் சூதாட்டத் தரகர்களை தில்லி போலீஸôர் கைது செய்தனர்.

    அந்த அணியைச் சேர்ந்த சித்தார்த் திரிவேதியை ஏற்கெனவே, அரசுத் தரப்பு சாட்சியாக சேர்த்துள்ள நிலையில், சூதாட்ட வழக்கிற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் திராவிடையும் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்க தில்லி போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி கடந்த புதன்கிழமை பெங்களூர் சென்ற தில்லி போலீஸôர், திராவிடின் வீட்டிற்கு சென்று அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

    இது தொடர்பாக தில்லி போலீஸôர் கூறுகையில், "திராவிட், நட்சத்திர அந்தஸ்து பெற்றவர் என்பதால், ராஜ்குந்த்ராவைப் போல் அவரை தில்லிக்கு அழைக்காமல், நாங்களே திராவிடின் வீட்டுக்கு சென்று அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தோம். ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்தியை முதல்முறையாக கேள்விப்பட்டபோது, சகவீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் ஆகியோர் தன்னை ஏமாற்றிவிட்டதாக திராவிட் கருதியுள்ளார்.

    ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் மீது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்ததா? அவர்கள் 3 பேரையும் ஆடும் லெவனில் சேர்க்குமாறு ஏதாவது நிர்பந்தம் வந்ததா என திராவிடிடம் விசாரித்தோம். ஆனால் அவர்கள் குறித்து எந்த தனக்கு சந்தேகமும் வரவில்லை. போட்டிகளின் அடிப்படையில்தான் வீரர்களைத் தேர்வு செய்தேன் என திராவிட் பதிளித்தார்.

    திராவிட் மீது யாரும் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. சூதாட்ட வழக்கிற்கு பலம் சேர்ப்பதற்காகவும், திடமான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்காகவும்தான் திராவிடின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தோம்.

    இதேபோல் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பேடி உப்டனின் வாக்குமூலத்தைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. உப்டன், தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறார். அவர் இந்தியா வந்ததும், அவரும் அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்கப்படுவார்'

    என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai