Enable Javscript for better performance
காமன்வெல்த் செஸ்: அபிஜீத் குப்தா சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    
    Abhijeet

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19-வது காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபிஜீத் குப்தா பட்டம் வென்றார்.

    இப்போட்டி போர்ட் ஆஃப் எலிசபெத் நகரில் நடைபெற்றது. இதில், 29 நாடுகளைச் சேர்ந்த 900 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியின் இறுதிச்சுற்றான 11-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த ஜி.ஆகாஷுடன் அபிஜீத் குப்தா டிரா செய்து 9 புள்ளிகளைப் பெற்றார். டை பிரேக்கர் முறையில் சிறந்த ஸ்கோரைப் பெற்றதால் அபிஜீத் குப்தா தங்கப் பதக்கத்தை பெற்றார்.

    காமன்வெல்த் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், ஒட்டு மொத்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதற்கான பட்டத்தையும் குப்தா பெற்றார்.

    இப்போட்டியில், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி ஃபெடோர்சக் வெள்ளிப் பதக்கத்தையும், நெதர்லாந்தின் டிவியகோவ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

     

    தென் ஆப்பிரிக்க அதிபர் பாராட்டு

    19-வது காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர் அபிஜீத் குப்தாவுக்கு அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமா பாராட்டு தெரிவித்தார்.வெற்றி பெற்ற குப்தா, ஜேக்கப் ஜுமாவிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றார்.

    இப்போட்டியில் கலந்து கொண்ட குறைந்த வயதுடைய  பிரிட்டனைச் சேர்ந்த கீகன் ரோவுடன் (5) ஜேக்கப் ஜுமா செஸ் விளையாடினார்.

    இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது ராபீன் தீவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது செஸ் விளையாட கற்றுக் கொண்டதாகவும், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து விளையாடியதையும் ஜுமா நினைவு கூர்ந்தார்.

    மனது மிகவும் சோர்வடைந்திருக்கும்போது செஸ் விளையாட்டு மனதுக்கு ஆறுதலை அளிக்கிறது. பள்ளிகளில் செஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai