Enable Javscript for better performance
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி ஜெர்மனி புறப்பட்டது- Dinamani

சுடச்சுட

    

    ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி ஜெர்மனி புறப்பட்டது

    By ்ல  |   Published on : 16th July 2013 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜெர்மனியில் நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றது.

    இப்போட்டி வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை ஜெர்மனியில் உள்ள மான்செங்லாத்பச் நகரில் நடைபெற உள்ளது.

    இப்போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு சுஷீலா ஷானு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி "சி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ரஷிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் ஜூலை 27-ம் தேதி நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து, ஜூலை 28-ம் தேதி நியூஸிலாந்து அணியுடனும், ஜூலை 30-ம் தேதி ரஷிய அணியுடனும் இந்தியா பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இப்போட்டிக்கு முன்பு பெல்ஜியம், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆர்ஜெண்டீனா அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய மகளிர் அணி பாட்டியாலாவில் 2 மாதங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.

    வீராங்கனைகளின் விவரம்:

    தடுப்பாட்டக்காரர்கள்: பிங்கி தேவி, தீப் க்ரேஸ் எக்கா, நமிதா டாப்போ, மன்ஜித் கெüர், எம்.என்.பூனம்மா, சுஷீலா ஷானு (கேப்டன்), மோனிகா.

    நடுகள வீராங்கனைகள்: லிலி ஷானு, லிலிமா மின்ஸ், நவ்ஜோத் கெüர், வந்தனா கடாரியா, ரிதுஷா ஆர்யா.

    முன்கள வீராங்கனைகள்: பூனம் ராணி, ராணி (துணைக் கேப்டன்), அனுபா பார்லா மற்றும் நவ்நீத் கெளர்.

    கோல் கீப்பர்: சனரிக் ஷானு, பிகன் சாய்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai