நண்பருக்கு தோனி மருத்துவ உதவி
Published on : 16th July 2013 02:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

"ஹெலிகாப்டர் ஷாட்டை' தனக்கு அறிமுகப்படுத்திய நண்பரான சந்தோஷ் லாலுக்கு இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மருத்துவ உதவி செய்து வருகிறார்.
கணைய அழற்சியால் அவதிப்பட்டு வந்த சந்தோஷ் லால், ராஞ்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திங்கள்கிழமை தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோனியைத் தவிர, சந்தோஷின் மற்ற நண்பர்களும் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர்.
முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரரான சந்தோஷ் லாலின் குடும்பத்துக்கு ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் ரூ. 1 லட்சம் உதவித் தொகை அளித்துள்ளது. மேலும் சங்கத்தின் உறுப்பினர்கள் ரூ. 39 ஆயிரம் அளித்துள்ளனர். ராஞ்சி கிரிக்கெட் போட்டியில் சந்தோஷ் லால், தோனியுடன் இணைந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. லால், தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.