Enable Javscript for better performance
பாகிஸ்தான் அணித் தேர்வாளராக மொயின் கான் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    
    moinkhan

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக அந்நாட்டின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மொயின் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணி படு தோல்வியடைந்தது. இதனால், அணித் தேர்வாளராக இருந்த இக்பால் காசிம் கடந்த மாதம், தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மொயின் கான் பெயரை தலைமைத் தேர்வாளராக திங்கள்கிழமை அறிவித்தது.

    41 வயது நிரம்பிய மொயின் கான், அணியின் இளம் தலைமை தேர்வாளர் என்ற பெருமையைப் பெற்றார். இது குறித்து மொயின் கான் கூறுகையில், "பாகிஸ்தானில் கிரிக்கெட்டை மக்கள் தீவிரமாக நேசிக்கின்றனர். அதனால், அணியின் தலைமைத் தேர்வாளாராக இருப்பது சவாலான விஷயம்.

    இருப்பினும், 2015-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு அணியைத் தயார் செய்வது குறித்து தெளிவான பார்வையுடன் உள்ளேன். பாகிஸ்தானில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர்' என்று மொயின் கான் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தாற்காலிக தலைவர் நஜம் சேதியை சந்தித்து மொயின் கான் ஆலோசனை நடத்தினார்.

    இவர், பாகிஸ்தான் அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 219 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai