Enable Javscript for better performance
பால் பாட்மிண்டன்: ஐஓபி, தெற்கு ரயில்வே கூட்டு சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    பால் பாட்மிண்டன்: ஐஓபி, தெற்கு ரயில்வே கூட்டு சாம்பியன்

    By dn  |   Published on : 16th July 2013 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான 5-வது செயின்ட் ஜோசப் கோப்பை பால் பாட்மிண்டன் போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) மற்றும் தெற்கு ரயில்வே அணி கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றன.

    இப்போட்டியை சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி நடத்தியது. கல்லூரி மைதானத்தில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய இப்போட்டி திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 17 அணிகள் கலந்து கொண்டன. சூப்பர் லீக் சுற்றில் ஐஓபி, மேற்கு ரயில்வே, ஐசிஎஃப் மற்றும் தெற்கு ரயில்வே ஆகிய அணிகள் முன்னேறியிருந்தன.

    இச்சுற்றில் ஐஓபி மற்றும் தெற்கு ரயில்வே அணிகள் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. திங்கள்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஷிப்புக்கான ஆட்டத்தில் ஐஓபி, தெற்கு ரயில்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி 22-14 என்ற முன்னிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைந்து கோப்பையை பெற்றன.

    அதேபோல் 3-வது மற்றும் 4-வது இடத்துக்கான ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால் ஐசிஎஃப் மற்றும் மேற்கு ரயில்வே அணிகளும் கூட்டாக இரண்டாம் இடத்தைப் பிடித்தன. சாம்பியன் பட்டம் பெற்ற அணிகளுக்கு ரூ. 70 ஆயிரமும், 2-ம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு ரூ. 30 ஆயிரமும் ரொக்கம் பரிசாக அளிக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai