மாநில கபடி: சென்னை அணி வெற்றி
By dn | Published on : 16th July 2013 02:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

25-வது தமிழ்நாடு சப்-ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாவட்ட அணி முதன்முறையாக பட்டம் வென்றது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள எம்.ஆர்.சி கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இப்போட்டி நடைபெற்றது.
சென்னை அணி, தனது லீக் ஆட்டங்களில் நாமக்கல், தேனி மற்றும் தூத்துக்குடி அணிகளைத் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விருதுநகர் அணியையும், காலிறுதியில் ராமநாதபுரம் அணியையும் வீழ்த்தியது.
அரையிறுதி ஆட்டத்தில் 26-22 என்ற புள்ளிக் கணக்கில் காஞ்சிபுரம் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் முதன்முறையாக நுழைந்தது.
இறுதிச்சுற்றில் சேலம் அணியுடன் சென்னை அணி பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் 23-20 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சென்னை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.