Enable Javscript for better performance
விளம்பரத் தூதர் பணி: சச்சினை விடுவித்தது ஐஏஎஃப்!- Dinamani

சுடச்சுட

    
    sachin

    இந்திய விமானப் படையின் (ஐஏஎஃப்) விளம்பரத் தூதர் பணியிலிருந்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    விமானப் படையில் பணியாற்றுவதற்கு இந்திய இளைஞர்களை ஈர்ப்பதற்காக சச்சினை, விளம்பரத் தூதராக நியமித்தது ஐஏஎஃப். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், விளம்பரத் தூதர் பணியிலிருந்து சச்சின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    அடிப்படைப் பயிற்சி விமானமான "பைலேட்டஸ்' விமானத்தின் தூதராக சச்சின் இருந்தார். ஆனாலும் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்க்க முடியாததால், அந்த விமானத்தின் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர முடிவு செய்துள்ளது ஐஏஎஃப். ஸ்விட்சர்லாந்தில் இருந்து 75 "பைலேட்டஸ்' விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இப்போது 14 விமானங்கள் வாங்கப்பட்டு, ஹைதராபாதில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    கிரிக்கெட்டில் சச்சின் படைத்த சாதனைகளை கெüரவிக்கும் வகையில் அவருக்கு 2010-ம் ஆண்டு "குரூப் கேப்டன்' அந்தஸ்து வழங்கியது ஐஏஎஃப். விமானப் படை பின்னணியில்லாத ஒருவருக்கு "குரூப் கேப்டன்' பதவி வழங்கப்பட்டது அதுவே முதல் முறையாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai