Enable Javscript for better performance
விளையாட்டு துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    * பிரான்சில் வரும் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ள ஐபிசி உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட இந்த அணியில் லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹெச்.என்.கிரிஷா இடம் பிடித்துள்ளார்.

    *  ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஷுபம் கஜூரியா, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷுபம் பெற்றார். அவருக்கு ரூ. 2 லட்சம் ரொக்கம் பரிசளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

    * சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடுவது சிறப்பாக உள்ளதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். கடந்த 12 ஆட்டங்களில் தொடக்க வீரராகக் களமிறங்கிய சர்மா, 5 அரை சதங்களை விளாசியுள்ளார்.

    * செர்பியாவில் நடைபெற்று வரும் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய அணி 4 தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.

    * ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல கால்பந்து போட்டியையும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இந்திய கால்பந்து சம்மேளனம் மற்றும் ஐஎம்ஜி-ரிலையன்ஸ் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது.  இக்கூட்டம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai