Enable Javscript for better performance
உலக தடகளம்: யோகன் பிளேக் விலகல்- Dinamani

சுடச்சுட

    
    blake

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து ஜமைக்கா வீரர் யோகன் பிளேக் விலகியுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக அதிலிருந்து யோகன் பிளேக் விலகியுள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஜமைக்காவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்றபோது பிளேக்கிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து இன்னும் பிளேக் முழுமையாக குணமடையாததால், இப்போது விலகியிருக்கிறார். யோகன் பிளேக், கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றவர் ஆவார்.

    டைசன் கய், ஆசாபா பாவெல் உள்ளிட்ட வீரர்கள் ஊக்கமருந்து பிரச்னையில் சிக்கி போட்டியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், இப்போது யோகன் பிளேக்கின் விலகல், தடகள வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai