Enable Javscript for better performance
கிளாரோ ஓபன்: காலிறுதியில் திவிஜ்-ராஜா ஜோடி- Dinamani

சுடச்சுட

    

    கொலம்பியாவின் போகோட்டா நகரில் நடைபெற்று வரும் கிளாரோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண்-பூரவ் ராஜா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இந்த ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஈகுவடாரின் கோமேஸ்-கொலம்பியாவின் குயின்டீரோ ஜோடியை வீழ்த்தியது.

    இந்திய வீரர்கள் திவிஜ் சரண், பூரவ் ராஜா ஆகிய இருவரும் இணைந்து விளையாடும் முதல் ஏடிபி டென்னிஸ் போட்டி இதுவாகும். இந்த சீசனில் ஏடிபி சேலஞ்சர்ஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி, தற்போது ஏடிபி டென்னிஸ் போட்டியில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai