Enable Javscript for better performance
தோனியின் நண்பர் மரணம்!- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் நெருங்கிய நண்பரும், அவருடன் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடியவருமான சந்தோஷ் லால் (32) புதன்கிழமை மரணமடைந்தார்.

    கணைய நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர், சுயநினைவை இழந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்பு தில்லி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு பெற்றோரும், மனைவியும், 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

    தோனி என்றாலே, நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்தான். அந்த ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்தவர் இந்த சந்தோஷ் லால்தான். அவர் கணைய நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய சிகிச்சைக்காக தோனியும் உதவி செய்தார்.

    இதேபோல் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கமும், அதன் உறுப்பினர்களும் சந்தோஷ் லாலுக்கு நிதியுதவி செய்தனர். எனினும் சந்தோஷ் லாலை காப்பாற்ற முடியவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai