Enable Javscript for better performance
மாநில வாலிபால்: காஞ்சிபுரத்தில் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான வாலிபால் போட்டி காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

    இது குறித்து போட்டி அமைப்பாளர் ஜின்னா, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

    காஞ்சி மாவட்ட வாலிபால் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி 2009-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது 3-வது முறையாக காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், மறைந்த சிவந்தி ஆதித்தன் நினைவாக வாலிபால் போட்டி நடைபெறவுள்ளது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 130 பள்ளிகள் கலந்து கொள்கின்றன. போட்டி வியாழக்கிழமை (ஜூலை 18) தொடங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெறும். ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் தனித்தனியாக போட்டி நடைபெறும்.

    முதல் பரிசு ரூ. 10 ஆயிரம்: ஆடவர் பிரிவில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், கோப்பையும் வழங்கப்படும். 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ. 7 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். மகளிர் பிரிவில் முதல் பரிசாக ரூ. 7 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும். 2-வது மற்றும் 3-வது பரிசாக முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்.

    ஆடவர் பிரிவில் சிறப்பாக விளையாடும் 10 பேருக்கும், மகளிர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் 6 பேருக்கும் சைக்கிள் வழங்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai