Enable Javscript for better performance
2-வது ஒருநாள் ஆட்டம்: பாகிஸ்தானுக்கு மே.இ.தீவுகள் பதிலடி- Dinamani

சுடச்சுட

    

    2-வது ஒருநாள் ஆட்டம்: பாகிஸ்தானுக்கு மே.இ.தீவுகள் பதிலடி

    By dn  |   Published on : 17th July 2013 11:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    west

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள்.

    இதன்மூலம் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் கண்ட படுதோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.

    முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 47.5 ஓவர்களில் 195 ரன்களுக்கு சுருண்டது.

    மேற்கிந்தியத் தீவுகளின் கயானாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார்.

    இதையடுத்து சார்லஸýடன் இணைந்தார் டேரன் பிராவோ. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. சார்லஸ் 31 ரன்களில் வீழ்ந்தார். இதையடுத்து சாமுவேல்ஸ் களம்புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய டேரன் பிராவோ 54 ரன்கள் எடுத்திருந்தபோது அஜ்மல் பந்துவீச்சில் போல்டு ஆனார். அவர் 81 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

    பின்னர் வந்த போலார்ட் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் டுவைன் பிராவோ 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்க்க, மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது.

    பாகிஸ்தான் தரப்பில் அப்ரிதி, அஜ்மல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் தோல்வி: பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஒருபுறம் நசிர் ஜம்ஷெட் சிறப்பாக விளையாடினார். ஆனால் மறுமுனையில் அஹமது ஷெஸாத் 19, முகமது ஹபீஸ் 20, மிஸ்பா உல் ஹக் 17, ஆசாத் ஷபிக் 10 ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி தடுமாற்றம் கண்டது. 93 பந்துகளைச் சந்தித்த நசிர் ஜம்ஷெட் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தானுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. பின்வரிசையில் உமர் அக்மல் 50 ரன்கள் எடுத்தபோதும், பலனில்லை. இறுதியில் பாகிஸ்தான் 47.5 ஓவர்களில் 195 ரன்களுக்கு சுருண்டது.

    மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் 26 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரேன் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

    5 ஆட்டங்கள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3-வது ஒருநாள் ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை கிராஸ் ஐஸ்லெட்டில் நடைபெறுகிறது.

     

    சுருக்கமான ஸ்கோர்

    மே.இ.தீவுகள்-232/8

    (டேரன் பிராவோ 54, டுவைன் பிராவோ 43*, போலார்ட் 30, அப்ரிதி 2வி/29)

    பாகிஸ்தான்-195

    (நசிர் ஜம்ஷெட் 54, உமர் அக்மல் 50, சுனில் நரேன் 4வி/26)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai