Enable Javscript for better performance
இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டார் இயான் பெல்- Dinamani

சுடச்சுட

    
    bell

    ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 72.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது.

    இயான் பெல் 93, ஜானி பேர்ஸ்டோவ் 62 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    இங்கிலாந்தின் லார்ட்ஸில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியில் ஸ்டீவன் ஃபின்னுக்குப் பதிலாக டிம் பிரெஸ்னன் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. எட் கோவனுக்குப் பதிலாக உஸ்மான் கவாஜாவும், மிட்செல் ஸ்டார்க்கிற்குப் பதிலாக ரியான் ஹாரிஸýம் சேர்க்கப்பட்டனர்.

    சரிவுக்குள்ளான இங்கிலாந்து: டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், பேட்டிங்கை தேர்வு செய்தார். குக்கும், ஜோ ரூட்டும் அந்த அணியின் இன்னிங்ûஸத் தொடங்கினர். அந்த அணி 5-வது ஓவரில் 18 ரன்களை எட்டியபோது அலாஸ்டர் குக்கை சாய்த்தார் வாட்சன். குக் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்தார்.

    அடுத்த ஓவரை வீசிய ரியான் ஹாரிஸ், இங்கிலாந்தின் ஜோ ரூட் (6), பீட்டர்சன் (2) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து 6 ஓவர்களில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இயான் பெல் 93: கடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை மீட்ட இயான் பெல், இந்த ஆட்டத்திலும் அந்த அணியை கைவிடவில்லை. பெல்லும், ஜொனாதன் டிராட்டும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தனர். கடந்த போட்டிகளில் ஆமைவேகத்தில் ஆடியதால் விமர்சனத்துக்குள்ளான டிராட், இந்த முறை பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். அவர் 87 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து பெல்லுடன் இணைந்தார் ஜானி பேர்ஸ்டோவ். மறுமுனையில் சிறப்பாக ஆடிய பெல் 110 பந்துகளில் அரைசதம் கண்டார். பேர்ஸ்டோவ் 21 ரன்கள் எடுத்திருந்தபோது பீட்டர் சிடில் பந்துவீச்சில் போல்டு ஆனார். ஆனால் டி.வி. ரீபிளேயில் பார்த்தபோது அது நோ}

    பாலாகவே, பேர்ஸ்டோவ் தப்பித்தார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பேர்ஸ்டோவ், 96 பந்துகளில் அரைசதம் கண்டார். தேநீர் இடைவேளைக்கு அடுத்த இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 72.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. இயான் பெல் 194 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 93, பேர்ஸ்டோவ் 124 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

    டிராட்டுக்கு ராசியான லார்ட்ஸ்!இங்கிலாந்தின் ஜொனாதன் டிராட்டுக்கு லார்ட்ஸ் மைதானம் எப்போதும் ராசியானதாகவே இருந்துள்ளது. இங்கு 14 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டிராட், 8 அரைசதங்களை விளாசியுள்ளார்.

    ராணி எலிசபெத்! போட்டியை நேரில் காண பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், லார்ட்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணிகளின் வீரர்கள் மற்றும் அலுவலர்களை ராணி அறிமுகம் செய்துவைத்தார். அதன்பிறகு முதல் "செஷனில்' சிறிது நேரம் போட்டியைக் கண்டுகளித்தார்.

    ரியான் ஹாரிஸ் 50

    ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ரியான் ஹாரிஸ், தான் வீசிய 3-வது ஓவரிலேயே இரு விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்தை சரிவுக்குள்ளாக்கினார்.

    3-வது விக்கெட்டாக ஜொனாதன் டிராட்டை வீழ்த்தியபோது, டெஸ்ட் போட்டியில் 50-வது விக்கெட்டை வீழ்த்தினார் ஹாரிஸ். தனது 13-வது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டில் அரைசதம் கண்டுள்ளார் ஹாரிஸ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai