Enable Javscript for better performance
இந்திய அணிக்கு புதிய கோல் கீப்பிங் பயிற்சியாளர் ஸ்டேனிஃபோர்த்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய அணிக்கு புதிய கோல் கீப்பிங் பயிற்சியாளர் ஸ்டேனிஃபோர்த்

    By dn  |   Published on : 19th July 2013 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய சீனியர் மற்றும் ஜூனியர் ஹாக்கி அணிகளின் கோல் கீப்பிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஸ்டேனிஃபோர்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர், இந்திய சீனியர், ஜூனியர் அணிகளுக்கு திட்டமிடல் மற்றும் உத்திகள் தொடர்பாகவும் ஆலோசனை வழங்குவார்.

    37 வயதாகும் ஸ்டேனிஃபோர்த், தென் ஆப்பிரிக்க அணிக்காக 65 போட்டிகளில் விளையாடியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் கோல் கீப்பிங் பயிற்சியாளராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    இதேபோல் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் விளையாடி வரும் ராஞ்சி ரைனோஸ் அணியின் கோல் கீப்பிங் பயிற்சியாளராக இருப்பதோடு, அந்த அணி வீரர்களின் செயல்பாடுகளை விடியோ மூலம் ஆராய்ந்து தகுந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

    இது தொடர்பாக ஹாக்கி இந்தியா பொதுச் செயலர் நரீந்தர் பத்ரா கூறுகையில், "ஸ்டேனிஃபோர்த் மூலம் இந்திய கோல் கீப்பர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள்.

    ஆசிய கோப்பை, உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளுக்கு முன்னதாக கோல் கீப்பிங் பயிற்சியாளராக ஸ்டேனிஃபோர்த் நியமிக்கப்பட்டிருப்பதால், அது இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்' என்றார்.

    மைக்கேல் நாப்ஸூக்கு நாளை பிரிவு உபசார விழா!

    இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மைக்கேல் நாப்ஸýக்கு சனிக்கிழமை பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.

    ஹாக்கி இந்தியாவின் சார்பில் நடத்தப்படும் இந்த விழா, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெறுவதாக இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் ஜிஜி தாம்சன் தெரிவித்துள்ளார்.

    இந்த மாதத்தோடு பணியிலிருந்து விடைபெறவுள்ள மைக்கேல் நாப்ஸ், தற்போது பாட்டியாலாவில் உள்ள என்ஐஎஸ் மையத்தில் உள்ளார். இந்த மாத இறுதி வரை அங்குள்ள மாணவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் நாப்ஸ் பயிற்சியளிப்பார் என்றும் தாம்சன் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai