Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    லாராவைவிட சச்சினே சிறந்த மேட்ச் வின்னர் என்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. முன்னதாக லாராதான் சிறந்த மேட்ச் வின்னர் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    ரூ.6 கோடி சேவை வரி செலுத்துமாறு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் கேபிஎச் ட்ரீம் கிரிக்கெட் நிறுவனத்துக்கு மத்திய உற்பத்தி வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

     

    அடுத்த 3 மாதங்களில் கடுமையான பயிற்சி மேற்கொண்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

     

    போலந்தின் ரோகிளாவ் நகரில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்திய ஆடவர் அணி 2-வது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

     

    ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ஜமைக்கா தடகள வீரர் ஆசாபா பாவெலுக்கு வழங்கி வந்த ஸ்பான்ஸர்ஷிப்பை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது சீன நிறுவனம்.

     

    மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் விளையாடிவிட்டு இலங்கை திரும்பியபோது விமானத்தின் கதவுகளை திறக்க முயன்ற இலங்கை "ஏ' அணி வீரர் ரமித் ரம்புக்வெல்லாவுக்கு அந்தத் தொடரில் வழங்கப்பட்ட போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

     

    இந்திய பாட்மிண்டன் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 30-ல் நடைபெறவிருந்த ஏலம், ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai