Enable Javscript for better performance
ஜெர்மன் ஓபன்: முதல் சுற்றில் போராடி வென்றார் ஃபெடரர்- Dinamani

சுடச்சுட

    

    ஜெர்மன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், முதல் சுற்றில் போராடி வெற்றி கண்டார்.

    ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 3-6, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டேனியல் பிரான்ட்ûஸ தோற்கடித்தார்.

    இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம், ஜெர்மனி ஓபனில் 30-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் ஃபெடரர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செக்.குடியரசின் ஜான் ஹஜெக்கை சந்திக்கிறார் ஃபெடரர்.

    வெற்றி குறித்துப் பேசிய ஃபெடரர், "இதுபோன்ற கடுமையான சவால் நிறைந்த போட்டிகள் நல்லது என்று நினைக்கிறேன். முதல் செட்டை இழக்கும்போது போட்டி சவால் நிறைந்ததாக மாறிவிடும். எனினும் முக்கியமான கட்டங்களில் தவறு செய்யாத பட்சத்தில் சரிவிலிருந்து மீண்டு வெற்றி பெற முடியும்' என்றார்.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டதன் எதிரொலியாக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு தரவரிசையில் 5-வது இடத்துக்கு ஃபெடரர் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai