Enable Javscript for better performance
டி.ஆர்.எஸ்.விவகாரம்: கில்கிறிஸ்ட் சாடல்- Dinamani

சுடச்சுட

    
    roger

    நடுவரின் தீர்ப்பை மறுஆய்வு செய்யும் முறை (டிஆர்எஸ்), கிரிக்கெட்டில் உள்ள பிரச்னைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. அதனால் எந்தத் தீர்வும் கிடைக்காது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: டிஆர்எஸ் முறை கொண்டு வரப்பட்டதன் காரணமாக நடுவர் வழங்கும் தீர்ப்புகளின் உண்மைத் தன்மையும், அவர் வழங்கும் தீர்ப்புதான் இறுதியானது என்பதும் அழிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். இப்போது ஒருவருக்கு அவுட் கொடுக்கப்பட்டால், பேட்ஸ்மேன் அல்லது கேப்டன், டிஆர்எஸ் முறை மூலம் மூன்றாவது நடுவரை அணுகுகிறாரா என்பதைத்தான் அனைவரும் பார்க்கிறார்கள்.

    நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் முறை மூலம் 3-வது நடுவரை வீரர்கள் அணுகும்போது, அதனால் குழப்பம் ஏற்படுவதைக் காண முடிகிறது. நடுவர் மற்றும் ரெப்ரிக்கள் குறித்தும், அவர்களின் தீர்ப்பு குறித்தும் கேள்வியெழுப்பாமல் இருப்பதுதான் ஒரு விளையாட்டின் உண்மையான உத்வேகம் ஆகும்.

    இந்திய கிரிக்கெட் வாரியம் எதற்காக டிஆர்எஸ் முறையை எதிர்க்கிறது என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இந்த டிஆர்எஸ் முறை மூலம் பிரச்னைகளை சரி செய்ய முடியாது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai