Enable Javscript for better performance
பிசிசிஐ செயற்குழுவில் சீனிவாசன் பங்கேற்கமாட்டார்- Dinamani

சுடச்சுட

    
    dalmiha

    பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் என்.சீனிவாசன் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.

    பிசிசிஐ செயற்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நிலையில், டால்மியா மேலும் கூறியது: ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் திராவிட் அரசுத் தரப்பு சாட்சியாகியிருப்பது, அவருக்கு கடினமான ஒன்றாகும். அவருக்காக வருத்தப்படுகிறேன்.

    திராவிட் போன்ற தலைசிறந்த ஒரு வீரரின் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் சிக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது.

    வரும் 28-ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தின்போது ஸ்ரீசாந்த் விவகாரம் தொடர்பான அறிக்கையை பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி தாக்கல் செய்வார் என்றார்.

    பிசிசிஐ தலைவரான சீனிவாசன், தனது மருமகன் குருநாத் மெய்யப்பன், ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, இப்போது அந்த பதவியில் இருந்து விலகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai