Enable Javscript for better performance
மிக்கி ஆர்தரின் குற்றச்சாட்டு மிக மோசமானது- Dinamani

சுடச்சுட

    
    mcgrath

    ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளரான மிக்கி ஆர்தரின் குற்றச்சாட்டு மிக மோசமானது. அவர் கூறியுள்ள கருத்து ஏமாற்றமளிக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இதையடுத்து கோபமடைந்த ஆர்தர், "தான் பயிற்சியாளராக இருந்தபோது இனரீதியான பாகுபாட்டைச் சந்தித்ததாகவும், வாட்சனை, ஆஸ்திரேலியாவின் "புற்றுநோய்' என கேப்டன் கிளார்க் குறிப்பிட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அது தொடர்பாக மெக்ராத் கூறியிருப்பது:

    தான் பயிற்சியாளராக இருந்த அணி குறித்து மிக்கி ஆர்தர் தற்போது குற்றம்சாட்டியுள்ளது அந்த அணி மீது அவருக்கு கொஞ்சம்கூட அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

    ஆர்தரின் கருத்து ஏமாற்றமளிப்பதாக உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இனரீதியான பாகுபாடு மற்றும் வாட்சன் குறித்து ஆர்தர் கூறியுள்ள கருத்து மிக மோசமானதாகும். அதுபோன்ற பிரச்னைகளை கிளப்புவதற்கான நேரம் இது கிடையாது என்றார்.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ்

    டெஸ்ட் தொடர் குறித்துப் பேசிய மெக்ராத், "ஆஸ்திரேலிய அணி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai