Enable Javscript for better performance
பாரத ரத்னா விருது: தயான் சந்த் பெயர் பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    
    dhyan

    ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பெயரை, பாரத ரத்னா விருதுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை செயலர் பி.கே.தேவ் கூறுகையில், "பாரத ரத்னா விருதுக்கு தயான் சந்த் பெயரை பரிந்துரைத்து விளையாட்டு அமைச்சகம், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.

    இந்த விருதுக்கு தயான் சந்த் பெயரை மட்டுமே விளையாட்டு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது' என்றார்.

    முன்னதாக தயான் சந்தின் மகன் அசோக் குமார் தலைமையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, தயான் சந்தின் பேரன் கெüரவ் சிங் உள்ளிட்ட 6 கொண்ட குழு, மத்திய விளையாட்டு அமைச்சர் ஜிதேந்திர சிங்கை, கடந்த 12-ம் தேதி சந்தித்துப் பேசியது.

    பாரத ரத்னா விருதுக்கு தயான் சந்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறித்துப் பேசிய அவருடைய மகன் அசோக் குமார், "தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது கிடைக்கிறதோ, இல்லையோ, இந்த விருதுக்கு அவருடைய பெயரை விளையாட்டுத் துறை அமைச்சர் பரிந்துரை செய்ததே மிகப்பெரிய கெüரவம்தான்.

    பாரத ரத்னா விருதுக்கு தயான் சந்தின் பெயரை பரிசீலிப்பதற்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்கிறேன் என ஜிதேந்திர சிங் எங்களிடம் உறுதியளித்துள்ளார்.

    இதுவரை வேறு யாருடைய பெயரும் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. எனவே இந்த ஆண்டு தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது கிடைக்கும் என நம்புகிறோம்.

    இதேபோல் ஜிதேந்திர சிங்குடனான சந்திப்பின்போது, தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்திய பிஷன் சிங் பேடிக்கு எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

    இந்திய ஹாக்கியில் புரட்சியை ஏற்படுத்தியவரான தயான் சந்த், 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார்.

    2011-ல் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு 82 எம்.பி.க்கள் பரிந்துரை செய்தனர்.

    எனினும் அவர்களின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. கடந்த ஆண்டு பாரத ரத்னா விருதுக்கு தயான் சந்த், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, மலையேறுதல் வீரர் டென்ஸிங் நார்கய் ஆகியோரின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரைத்தது. ஆனால் யாருக்கும் விருது கிடைக்கவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai