Enable Javscript for better performance
ரோஹித் சர்மா, புஜாராவுக்கு பிசிசிஐ எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    
    spt2

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா ஆகியோரை ஊடகங்களிடம் பேசக்கூடாது என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் விளையாடிய ரோஹித் சர்மா, அங்கிருந்து நாடு திரும்பியதும், அந்தத் தொடர் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

    ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சேதேஷ்வர் புஜாரா, அது தொடர்பாக ஊடகங்களிடம் பேசினார். அதைத்தொடர்ந்து ஊடகங்களிடம் பேசினால், பிசிசிஐயுடன் வீரர்கள் செய்துள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை மீறிய செயலாகும் என்று அவர்கள் இருவரையும் பிசிசிஐ எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு தொடர் முடிந்தவுடன் ஊடகங்களிடம் பேசக்கூடாது என ரோஹித் சர்மா, புஜாரா ஆகியோரை பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் எச்சரித்தார்' என்றார்.

    பிசிசிஐ மீது கீர்த்தி ஆசாத் சாடல்: ஊடகங்களிடம் வீரர்களை பேசவிடாமல் தடுக்கும் பிசிசிஐ மீது முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் சாடியுள்ளார்.

    1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவரான கீர்த்தி ஆசாத் கூறுகையில், "வீரர்களை ஊடகங்களிடம் பேச தடை விதிக்கும் இந்த விதிமுறைகள் சரியானதல்ல. ஒரு வீரர் சிறப்பாக விளையாடினால், அவர் என்ன நினைக்கிறார், சிறப்பாக விளையாட அவர் எப்படி திட்டமிட்டார் என்பது குறித்து அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். எனவே சிறப்பாக விளையாடும் வீரர்களை ஊடகங்களிடம் பேச அனுமதிக்க வேண்டும். ஊடகங்களிடம் பேசவிடாமல் வீரர்களை தடுப்பது நியாயமான செயல் அல்ல' என்றார்.

    அதேநேரத்தில் சந்து போர்டே போன்ற வீரர்கள், பிசிசிஐயின் முடிவு சரியானது என தெரிவித்துள்ளனர். ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் உள்ளிட்ட பிரச்னைகளால் இந்திய கிரிக்கெட் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதுபோன்ற விஷயங்களை தடுப்பதற்கான நடவடிக்கையாகக்கூட பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்லாம் என்று கூறியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai