Enable Javscript for better performance
128 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- Dinamani

சுடச்சுட

    
    swan

    ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 128 ரன்களுக்கு சுருண்டது.

    எனினும் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்ûஸ ஆடத் தொடங்கியது.

    இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் தடுமாறியபோதும் இயான் பெல் (109), ஜானி பேர்ஸ்டோவ் (67) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது.

    இங்கிலாந்து-361: முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 89 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. பிரெஸ்னன் 7, ஆண்டர்சன் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    2-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் பிரெஸ்னன் முதல் நாளில் எடுத்த ரன்களோடு (7 ரன்கள்) நடையைக் கட்டினார். ஆண்டர்சன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டூவர்ட் பிராட்-கிரீம் ஸ்வான் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.

    ஸ்டூவர்ட் பிராட் 29 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 100.1 ஓவர்களில் 361 ரன்களில் முடிவுக்கு வந்தது. ஸ்வான் 26 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலிய தரப்பில் ரியான் ஹாரிஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டீவன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    சுருண்டது ஆஸ்திரேலியா: பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வாட்சன்- கிறிஸ் ரோஜர்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தது. வாட்சன் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. ரோஜர்ஸ் 15, பில் ஹியூஸ் 1, கவாஜா 14, ஸ்டீவன் ஸ்மித் 2 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

    ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் போராடிய கேப்டன் கிளார்க் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, 53.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா.

    இங்கிலாந்து தரப்பில் கிரீம் ஸ்வான் 5 விக்கெட்டுகளையும், பிரெஸ்னன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    பாலோ ஆன் கொடுக்கவில்லை: பாலோ-ஆனை தவிர்க்க ஆஸ்திரேலியா 162 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால் அந்த அணி 128 ரன்களில் சுருண்டபோதும், இங்கிலாந்து பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்ûஸ விளையாடியது. இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸில் 11.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

    ஜோ ரூட் 14, டிராட் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தனர். முன்னதாக கேப்டன் அலாஸ்டர் குக் 8 ரன்களில் பீட்டர் சிடில் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

    சுருக்கமான ஸ்கோர்

    முதல் இன்னிங்ஸ்

    இங்கிலாந்து-361

    (இயான் பெல் 109, பேர்ஸ்டோவ் 67, டிராட் 58, ரியான் ஹாரிஸ் 5வி/72, ஸ்டீவன் ஸ்மித் 3வி/18)

    ஆஸ்திரேலியா-128

    (வாட்சன் 30, கிளார்க் 28, கிரீம் ஸ்வான் 5வி/44, பிரெஸ்னன் 2வி/28)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai