Enable Javscript for better performance
உலகக் கோப்பை வில்வித்தை: இறுதிச்சுற்றில் இந்திய மகளிர் அணி- Dinamani

சுடச்சுட

    

    உலகக் கோப்பை வில்வித்தை: இறுதிச்சுற்றில் இந்திய மகளிர் அணி

    By dn  |   Published on : 21st July 2013 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    archery

    உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

    2013-ம் ஆண்டுக்கான வில்வித்தைப் போட்டி 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் கட்டம் சீனாவிலும், இரண்டாவது கட்டம் துருக்கியிலும் நடந்து முடிந்தது.

    தற்போது கொலம்பியாவின் மெடிலின் நகரில் மூன்றாவது கட்டப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், தீபிகா குமாரி, லாய்ஷ்ரம் பம்பாய்லா தேவி மற்றும் கமில் பைருலி ஆகியோரைக் கொண்ட மகளிர் அணி, அமெரிக்க அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

    அமெரிக்காவுடனான அரையிறுதிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய அணி 51-55 என்ற புள்ளிகளைப் பெற்று பின் தங்கியது.

    2-வது சுற்றில் அமெரிக்க அணியை விட 4 புள்ளிகள் அதிகம் பெற்று 106 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தது. எனினும், அடுத்த சுற்றில் இரு அணிகளும் 162 புள்ளிகளைப் பெற்று சமநிலையை எட்டின.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் அமெரிக்காவை விட 5 புள்ளிகள் அதிகம் பெற்று 216 புள்ளிகளுடன் இறுதிச்சுற்றுக்குள் இந்திய அணி நுழைந்தது.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வலிமை வாய்ந்த சீன அணியை எதிர்கொள்கிறது.

    காலிறுதியில் இந்திய அணி 224-201 என்ற புள்ளிக் கணக்கில் வெனிசூலா அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai