Enable Javscript for better performance
உலக தடகளம்: மகளிர் அணியில் அஸ்வினி- Dinamani

சுடச்சுட

    
    akkunji

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 4ஷ்400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியில் அஸ்வினி அக்குன்ஜி இடம் பிடித்தார்.

    ஆசியன் விளையாட்டுப் போட்டியில் அஸ்வினி இருமுறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை கடந்த 3-ம் தேதியுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து, உலக தடகள போட்டிக்கான மகளிர் அணியில் அஸ்வினி அக்குன்ஜி இடம் பிடித்தார். இந்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

    உலக தடகள சாம்பியன்ஷிப் ரஷியாவின் மாஸ்கோ நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில், 400ஷ்4 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 6 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி பங்கேற்கிறது. இந்த அணியில் எம்.ஆர்.பூவம்மா, திண்டு லூகா, அனு மரியம் ஜோஸ், நிர்மலா, அனில்தா தாமஸ் மற்றும் அஸ்வினி அக்குன்ஜி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai