Enable Javscript for better performance
சங்ககாரா 169; இலங்கை அபார வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    sanga

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் சங்ககாரா 137 பந்துகளில் 169 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் அடங்கும். கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் விளையாடியது.

    50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் சங்ககாரா 169 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார்.

    படு தோல்வி: பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 31.5 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக ஆல்விரோ பீட்டர்சன் 29 ரன்கள் எடுத்தார்.

    இலங்கைத் தரப்பில் பெரேரா மற்றும் ஹெராத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சங்ககாரா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

    5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai