Enable Javscript for better performance
பிரேம்குமாரின் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்திய காற்று!- Dinamani

சுடச்சுட

    

    பிரேம்குமாரின் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்திய காற்று!

    By dn  |   Published on : 21st July 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    prem

    நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தமிழகத்தைச் சேர்ந்த குமாரவேல் பிரேம்குமாரின் தேசிய சாதனை அதிவேக காற்றினால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

    உலக சாம்பியன்ஷிப் போட்டி மாஸ்கோவில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கு பெற, தகுதிபெறுவதற்கான கடைசித் தேதி ஜூலை 29 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டுமெனில் "பி' ஸ்டாண்டர்டு தகுதிச்சுற்றில் 8.10 மீட்டர் தாண்ட வேண்டும்.

    அமெரிக்காவில் சுலா விஸ்டா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியின் 2-வது சுற்றில் பிரேம்குமார் 8.12 மீட்டர் நீளம் தாண்டினார். அப்போது அதிகவேகமாகக் காற்று வீசியதைக் காரணம் காட்டி பிரேம் குமாரின் சாதனை நிராகரிக்கப்பட்டது. இது, பிரேம்குமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியதுடன், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறமுடியாமலும் போனது.

    இத்தகுதிச்சுற்றில் அமெரிக்காவின் ரொனால்டு டெய்லர் 8.19 மீட்டர் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். பிரேம்குமார் 2-வது இடத்தைப் பிடித்தார்.

    தகுதிச்சுற்றில், 2004-ம் ஆண்டு அம்ரித்பால் சிங் தாண்டிய 8.08 மீட்டரே தேசிய சாதனையாக உள்ளது. 8.0 மீட்டர் தாண்டியதே பிரேம்குமாரின் சிறந்தபட்சமாகும். பிரேம்குமாரின் தற்போதைய சாதனை (8.12 மீட்டர்) ஏற்கப்பட்டிருந்தால் இந்த சாதனைகளை அவர் முறியடித்திருப்பார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai