Enable Javscript for better performance
மாநில அளவிலான ஹாக்கி: திருநகர் அணி வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    trichy

    அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநகர் இந்திரா காந்தி அணி வெற்றி பெற்றது.

    அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையிலான 2-ம் ஆண்டு ஹாக்கி போட்டிகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றன.

    அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியை, பள்ளியின் முதல்வர் ஜான்சன் தொடங்கி வைத்தார்.

    இதில் கணக்கன்குப்பம் லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளி, ஆலத்தியூர் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, முட்டம் ஆல் செயின்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, ஏற்காடு மான்ட்போர்ட் மேல்நிலைப் பள்ளி, இந்திரா காந்தி மேல்நிலைப் பள்ளி, மணப்பாறை தியாகராசர் ஆலை மேல்நிலைப் பள்ளி, திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, ஜயங்கொண்டம் மெட்ரிக் பள்ளி அணி, அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கணக்கன்குப்பம் லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய அணிகள் பங்கேற்றன.

    லீக் சுற்றில் அணிகள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் முட்டம் ஆல்செயின்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி அணி, திருநகர் இந்திராகாந்தி மேல்நிலைப் பள்ளி அணி, திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணி, அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

    முதல் அரையிறுதியில் திருநகர் இந்திரா காந்தி மேல்நிலைப் பள்ளி அணி 6-2 என்ற கோல் கணக்கில் முட்டம் ஆல்செயின்ட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    2-வது அரையிறுதியில் அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அணி 7-0 என்ற கணக்கில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணியை வென்று இறுதிக்கு முன்னேறியது.

    இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருநகர் இந்திரா காந்தி மேல்நிலைப் பள்ளி அணி 2- 1 என்ற கோல் கணக்கில் அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

    மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் முட்டம் ஆல் செயின்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி அணி 5- 0 என்ற கோல் கணக்கில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணியை தோற்கடித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai