Enable Javscript for better performance
வலுவான நிலையில் இங்கிலாந்து- Dinamani

சுடச்சுட

    
    root

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. அதனால் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டிரா செய்வதே கடினமாகியுள்ளது.

    2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 361 ரன்களும், ஆஸ்திரேலியா 128 ரன்களும் எடுத்தன.

    233 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ûஸத் தொடங்கியது.

    அணியை சரிவிலிருந்து மீட்ட ரூட்: இந்த இன்னிங்ஸின் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர்.

    பீட்டர் சிடிலின் பந்து வீச்சில் குக் (8), டிராட் (0), பீட்டர்சன் (5) என முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.

    இருப்பினும் தொடக்க வீரர் ரூட் நங்கூரம் போன்று நிலைத்து ஆட அணி சரிவிலிருந்து மீண்டது. அவருக்கு பக்க பலமாக பிரஸ்னென் சிறப்பாக எதிரணி வீரர்களை எதிர்கொண்டார். அணியின் ஸ்கோர் 129-க உயர்ந்தபோது 38 ரன்களில் பிரஸ்னென் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இயான் பெல், ரூட்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி எதிரணிக்கு கடும் நெருக்கடி அளித்தது.

    ஆஸ்திரேலிய வீரர்களின் அச்சுறுத்தும் பந்து வீச்சை எளிதாகக் கையாண்ட ஜோ ரூட் சதமடித்தார் (247 பந்துகள்). பெல், தன் பங்குக்கு 82 பந்துகளைச் சந்தித்து அரை சதமடித்தார்.

    2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 178 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவை விட 566 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    இன்னும் இரு நாள்கள் ஆட்டம் மீதமுள்ளது. பேட்டிங்கில் தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியிலும் தோல்வியைத் தழுவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    2-வது இன்னிங்ஸில் அந்த அணியின் முன்னணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே போட்டியை டிரா செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழல் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai