கார்லோ ஓபன்: திவிஜ்-புரவ் ஜோடி சாம்பியன்
By dn | Published on : 22nd July 2013 01:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இந்தியாவின் டென்னிஸ் வீரர்களான திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி, கார்லோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றது.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்த ஜோடி பெற்ற முதல் ஏடிபி பட்டம் இதுவாகும்.
கொலம்பியாவின் போகோடா நகரில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 7-6 (4), 7-6 (3) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரோஜர் வேசன்-நெதர்லாந்தின் இகோர் சிஜிஸ்லிங் ஜோடியை வீழ்த்தியது.
இதன் மூலம் இந்திய ஜோடிக்கு சுமார் ரூ. 3.7 கோடி ரொக்கம் பரிசளிக்கப்பட்டது. இருவரும் தலா 250 ஏடிபி தர புள்ளிகளைப் பெற்றனர். இதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் காண்பர்.
திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாடிய முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.